Thursday, February 5, 2026

பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க ஆப்கானிஸ்தான் போட்ட பிளான்

பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீரை தடுக்க குனார் நதி​யில் புதிய அணை கட்​டப்​படும் என்று ஆப்​கானிஸ்​தான் அரசு அறி​வித்​துள்ளது.

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான் நாடு​களில் குனார் நதி பாய்​கிறது. இந்த நதி​யின் 70 சதவீத தண்​ணீரை பாகிஸ்​தான் பயன்​படுத்தி வரு​கிறது. இதை தடுக்க குனார் நதியில் புதிய அணையை கட்ட ஆப்​கானிஸ்​தான் அரசு முடிவு செய்​திருக்​கிறது.

குனார் நதி​யில் புதிய அணையை கட்ட திட்​ட​மிட்டு உள்​ளோம். இதற்​கான களஆய்வு நடத்​தப்​பட்​டு, விரி​வான திட்ட அறிக்கை தயார் செய்​யப்​பட்டு இருக்கிறது. புதிய அணை​யின் மூலம் ஆப்​கானிஸ்​தானில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ,ஏக்​கர் நிலம் பாசன வசதி பெறும் என்றும், இந்த அணை​யால் நாட்​டின் உணவு தானிய உற்​பத்​தி, மின் உற்​பத்தி கணிச​மாக அதி​கரிக்​கும் எனவும் ஆப்கானிஸ்​தான் நீர்​வளத் துறை அமைச்​சர் முல்லா அப்​துல் லத்​தீப் மன்​சூர் கூறியுள்ளார்.

குனார் நதி தொடர்​பாக ஆப்​கானிஸ்​தான், பாகிஸ்​தான் இடையே எந்த ஒப்​பந்​த​மும் கையெழுத்​தாக​வில்​லை என்றும், எனவே எவ்​வித பிரச்​சினை​யும் இன்றி நதி​யில் பிரம்​மாண்ட அணையை கட்​டு​வோம். பாகிஸ்​தானுக்கு செல்​லும் தண்​ணீர் தடுத்து நிறுத்​தப்​படும் என்றும் கூறியுள்ளார்.

Related News

Latest News