ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்திற்கு வடகிழக்கே நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளது. 3,214 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருப்பதாகவும், 5,400 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.