ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக போரில் ஈடுபட்டு வருகிறது மேலும் பொருளாதார நெருக்கடி போன்ற பல சவால்களை எதிர்த்துப் போராடி வருகிறது. இதற்கிடையில்,இயற்கை பேரழிவும் அந்நாட்டிற்கு பிரச்னையை அதிகரித்து உள்ளது.சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பேரழிவில் வீடுகள் இடிந்து விழுந்தது மற்றும் காயமடைந்தவர்களின் வலிமிகுந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இது என்று அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் , அந்நாட்டு செய்தியாளர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்த சிறுமியின் புகைப்படம் ஒன்று இணையத்தையே உலுக்கி உள்ளது.அதில், ‘இந்தச் சிறுமி தனது குடும்பத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர். அவரது குடும்பத்தில் உயிர் பிழைத்த எவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சிறுமியின் வயது 3 இருக்கும் ” என பதிவிட்டுள்ளார்.