Friday, December 26, 2025

பண மோசடியில் சிக்கிய அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத் கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளர்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், பிரசாத் (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Related News

Latest News