நூதன முறையில் திருட்டு…தம்பதியினரை கைது… விழுப்புரம் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை…என்ன நடந்தது? விவரிக்கிறது இந்த தொகுப்பு!!
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்யும்போது நகை தொலைந்து விட்டதாக பொய்யான புகார் அளித்து நூதன முறையில் இன்சூரன்ஸ் மூலம் கிளைம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த தம்பதியினரை கைது செய்த ரயில்வே போலீசார். மேலும்,அவர்களிடம் இருந்து 30 லட்சத்தி 87 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 140 கிராம் தங்க நகையினை பறிமுதல் செய்தனர் விழுப்புரம் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை.
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சார்ந்தவர் மகாலிங்கம் மற்றும் ருக்மணி தம்பதியினர். இவர்கள் கடந்த 30 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் 28 லட்சத்திற்கு 200 கிராம் நகை வாங்கிக் கொண்டு அன்று இரவே மன்னார்குடிக்கு வந்துள்ளனர்.
அங்கே அவர்கள் தனியார் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை மன்னார்குடியில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிகாலை 3.20 மணி அளவில் வந்த அதிவிரைவு ரயிலில் மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி மேலும் இரண்டு பிள்ளைகளுடன் வந்துள்ளனர்.
அப்போது விழுப்புரம் வந்தடைந்த அவர்கள் விழுப்புரத்தில் உள்ள இருப்பு காவல் நிலையத்தில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது தங்களது பையில் வைத்திருந்த 23 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் நகை காணாமல் போனதாக உள்ள என புகார் தெரிவித்துள்ளனர்.
“இதுல எதோ தப்பா இருக்கே ” என இவர்கள் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர், இவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களின் பேக்கில் இருந்து ரூபாய். 30,87,000 ஆயிரம் பணம் மற்றும் 140 கிராம் நகை உள்ளது தெரிய வந்தது, மேலும், மன்னார்குடியில் பாதி நகையை உருக்கி பணமாக்கி எடுத்து வந்தது அம்பலமாகியது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது “இது புதுசா இருக்குனே.. புதுசா இருக்கு” என்று போலீசாரே அதிர்ச்சி அடையும் வகையில் இருந்தது.

அதாவது, பிரபல தனியார் நகை கடையில் வாங்கிய நகைக்கு இன்சூரன்ஸ் செய்து பின்னர், நகை தொலைந்து விட்டதாக பொய்யான புகார் அளித்து நூதன முறையில் இன்சூரன்ஸ் மூலம் கிளைம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த தம்பதியினரை மாற்றிக்கொண்டனர். இவர்களில் நோக்கம் அதனை மீண்டும் பணம் பெறுவதற்காக இவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“இது என்ன பிரமாதம் இது விடா ஸ்பெஷல் ஐட்டம் நிரையா இருக்கு” என்ற அளவிற்கு இதற்க்கு முன்னாலும் ஒரு சம்பவத்தை அரங்கேற்றியள்ளது இந்த தம்பதியினர். அதாவது, இதுபோல் சில மாதங்களுக்கு முன்பு விஜயவாடாவிலும் இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் இருப்பு காவல் நிலைய போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் 30 லட்சத்து 87 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 140 கிராம் தங்க நகையினை பறிமுதல் செய்தனர். இதுபோன்று நூதன முறையில் மோசடி செய்த தம்பதியினரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..
