Saturday, December 27, 2025

விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு : இனி கூட்ட நெரிசல் இல்லாமல் செல்லலாம்

தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நாகர்கோவில், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல்-ஆழப்புலா, கோவை-ராமேசுவரம் ஆகிய 5 விரைவு ரெயில்களில் பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம்-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20681/20682) மற்றும் தாம்பரம்-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657/22658) ரெயில்களில் ஏப்ரல் 29 மற்றும் 30 வரை ஒரு 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியும், இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளும், மூன்று படுக்கை வசதி பெட்டிகளும் மற்றும் ஒரு 2-ம் வகுப்பு பொதுப் பெட்டியும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

அதேபோல், சென்னை சென்ட்ரல்-ஆழப்புலா, சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் மற்றும் கோவை-ராமேசுவரம் ரெயில்களிலும் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் மற்றும் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related News

Latest News