அதானியின் கிரீன் எனெர்ஜி நிறுவனத்துடன் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான 440 மில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் போட்டது. ஆனால் சந்தை விலையைவிட 70 சதவீதம் அதிக விலைக்கு வாங்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்வதாக, இலங்கை அரசு கடந்த மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
இந்நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறுவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசு விரும்பினால் எதிர்கால ஒத்துழைப்பிற்காக தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.