தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் தேதி மதுரையில் நடபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் பாஜக, திமுக கட்சியை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மு.க ஸ்டாலினையும் காட்டமாக விமர்சித்து பேசியிருந்தார். விஜய்யின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஞ்சித் பேசியதாவது: அண்மையில் மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய் பிழைப்பு தேடி அரசியலுக்கு வந்தவன் நான் இல்லை என்று குறிப்பிட்டார். அப்படி என்றால் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரை சொன்னாரா அல்லது அம்மா ஜெயலலிதாவை சொன்னாரா அல்லது கேப்டன் விஜயகாந்தை சொன்னாரா?
2014 ஏப்ரல் 16-ல் கொடிசியாவில் மோடி முன்பு பூனை மாதிரி பம்மிட்டு உட்கார்ந்து இருந்திங்களே… அன்னைக்கு எதுக்கு வந்து பார்த்தீங்க, கச்சத்தீவ மீட்கவா? தலைவா படம் ஓடணும்னு வந்து பார்த்தீங்க. பழச எல்லாம் மறந்துட்டீங்களா?” என்று பேசினார்.