Wednesday, July 16, 2025

நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்துக்கு நிபந்தனை ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகா் ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஜூன் 26-ஆம் தேதி இதே வழக்கில் நடிகா் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து நடிகா்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இதையடுத்து நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக் வரை வழக்கின் புலன் விசாரணை அதிகாரி முன் தின ஆஜராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news