Monday, December 29, 2025

மேலாளரை நீக்கிய நடிகர் விஷால்

விஷாலின் பட தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணனை அப்பதவியில் இருந்து நடிகர் விஷால் நீக்கியுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விஷால், நான் இக்கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அனைவருக்கும் தெரிவிப்பது, வ.ஹரிகிருஷ்ணன் எனது விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம், தேவி சமூக சேவை அறக்கட்டளை மற்றும் நமது விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் திறனிலும் தொடர்புடையவர் அல்ல என்பதை பொதுமக்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் திரு.வ.ஹரிகிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளவோ அல்லது கையாளவோ வேண்டாம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் தகவல்கள் ஏதேனும் இருந்தால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்சித்தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஹரிகிருஷ்ணன்.

நடிகர் விஷாலின் மேலாளராகவும் செயல்பட்டு வந்த நிலையில், அப்பொறுப்பில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

Related News

Latest News