Tuesday, January 21, 2025

நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? விஷாலின் மேலாளர் விளக்கம்

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் ‘மத கஜ ராஜா’. 2013ம் ஆண்டு வெளியாகவேண்டிய இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில், இப்படம் வருகிற 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சென்னையில் சமீபத்தில் நடைப்பெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பல திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். சுந்தர் சி, விஜய் ஆண்டனி, விஷால், குஷ்பு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். அப்போது கையில் மைக்கை நடுக்கத்துடன் பிடித்துக் கொண்டே பேசியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விஷாலில் மேலாளர் ஹரி கிருஷ்ணன் அவரது உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். “விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார். ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்” என்றார்.

Latest news