நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி மனு

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகாரான விஜய் கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டர். இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களகவே விஜய் – சங்கீதா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். பிப்ரவரி 24-ந்தேதி தாக்கல் செய்த இந்த மனு, வருகின்ற ஏப்ரல் 20-ந்தேதி செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News