Monday, January 26, 2026

புற்றுநோயால் பாதிக்கபட்ட குணச்சித்திர நடிகர் : உதவி கேட்கும் குடும்பம்

தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி ரோல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி. பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியதால் இவரை அனைவரும் சூப்பர்குட் சுப்பிரமணி என அழைக்க தொடங்கினர்.

இந்நிலையில் அவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவர் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவிற்கும் நண்பர்களை கொண்டு சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கேட்டு வருகிறார்.

Related News

Latest News