Wednesday, April 2, 2025

விஜய்யை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன் – பரபரப்பை கிளப்பும் பவர் ஸ்டார் சீனிவாசன்

‘தமிழக வெற்றிக் கழகம்’ வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் “தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் : “முதலில் விஜய்யை களத்திற்கு வரச்சொல்லுங்கள். மேடையில் பேசுவது எல்லாம் பஞ்ச் டயலாக், மக்களை சந்தித்து பிரசாரம் செய்யுங்கள். வசனம் பேசாதீர்கள். எனக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். எனக்கும் கூட்டம் கூடும்” என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

Latest news