ரிஷப் ஷெட்டியின் காந்தார 2 படம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் அண்மையில் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI) நடைபெற்று முடிந்தது.
இதில் காந்தாரா படத்தில் வரும் ‘ஓ’ என்ற ஆக்ரோஷமான ஒளியை நடிகர் ரன்வீர் சிங், கிண்டலடிக்கும் வகையில் முகபாவத்துடன் அதை செய்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் கன்னடர்களின் தெய்வங்களை அவர் கிண்டலிப்பதாகவும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
ரன்வீர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் நடிப்பில் வெளியாக உள்ள ‘துரந்தர்’ படத்தின் வெளியீட்டைத் தடுப்போம் என எச்சரித்துள்ளனர்.
