தேமுதிகவில் இருந்து நடிகர் மீசை ராஜேந்திரன் விலகல்

தேமுதிகவில் இருந்து நடிகர் மீசை ராஜேந்திரன் விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

”கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், தேமுதிகவில் 21 ஆண்டும் உழைத்திருக்கிறேன், ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக சார்பில் 3 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு இம்முறை வாய்ப்பு தராததால், அதிருப்தியில் இருந்த ராஜேந்திரன் தேமுதிகவில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது.

Related News

Latest News