Thursday, April 10, 2025

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் (87) உடல்நலக் குறைவால் காலமானார்.

பாலிவுட்டில் 1960, 70களில் மிகப்பெரிய நடிகராக வலம் வந்தார். 1992இல் பத்மஸ்ரீ, 2015ல் தாதாசாகேப் பால்கே விருதுகளை பெற்றுள்ளார். தேசப்பற்றுமிக்க படங்களில் நடித்ததற்காக பாரத் குமார் என்று அழைக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையிலேயே காலமானார். இவரின் மறைவிற்கு ரசிகர்களும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Latest news