நடிகர் மனோஜ் பாரதிராஜா நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் மனோஜ் பணியாற்றி இருப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. எந்திரன் படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

