Wednesday, July 30, 2025

சிறந்த இயக்குனருக்கான விருதை வென்ற மாதவன் – குவியும் வாழ்த்துக்கள்

சிறந்த இயக்குனருக்கான விருது நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது.

இந்த விழாவில் நடிகர் மாதவன் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார்.அவர் இயக்கி நடித்த ராகெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை மாதவன் இயக்கியிருந்தார்.

உளவு பார்த்ததாக போலி குற்றச்சாட்டில் சிக்கி சிறை தண்டனை மற்றும் சித்ரவதையை அனுபவித்த நேர்மையான விஞ்ஞானியின் வாழ்க்கை சம்பவங்களை இந்த படத்தில் மாதவன் பதிவு செய்து விட்டார். இந்நிலையில் மாதவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News