நகைச்சுவை நடிகர் மதன் பாப் உடல்நலக்குறைவால் நேற்று மாலை 5 மணியளவில் காலமானார். தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
புற்று நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த மதன்பாப் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
தற்போது அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.