பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆண்டனி. அந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல காட்சிகளில் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டனி, அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தார். இதற்காக, நடிகர் சந்தானம் மற்றும் லொள்ளு சபா நடிகர்கள் அவருக்கு உதவிகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் லொள்ளு சபா ஆண்டனி இன்று சென்னையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.