தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித்குமார் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
விடாமுயற்சி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் அஜித் நடிப்பில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீவி குமார் இசையில் வெளியாக உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.
இந்தப் படத்தின் டிரைலர் டீசர் ரசிகர் மத்தியில் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளதை முன்னிட்டு திரைப்படத்திற்கு ஆன ரிசர்வேஷன் புக்கிங்களும் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது.
நாளை திரைப்படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் திரையரங்கில் கட்டவுட் வைத்து கொண்டாட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது அவர்கள் ஒட்டி உள்ள போஸ்டரில் தலைமைச் செயலகம் முன்பு பாஜக தலைவர் அண்ணாமலையோடு அஜித் கோட் சூட் உடை அணிந்து நடந்து வருவது போலவும்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்துட்டீங்க தமிழ்நாட்டுக்கு எப்ப பெருமை சேர்க்க போறீங்க என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.