Tuesday, February 17, 2026

மீண்டும் கார் பந்தயத்துக்கு தயாரான நடிகர் அஜித்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித்குமார், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் இருந்து வருகிறார்.

கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் கிரெவென்டிக் 24எச் பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளார். கார் பந்தயத்திற்கு அஜித்குமார் தயாரான புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related News

Latest News