Sunday, December 22, 2024

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று, கர்நாடக முன்னாள் கர்நாடக மாநில முதல் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் எம்.பி மோகன் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

குறிப்பாக ஃபெஞ்சல் புயல் பாதிப்பு, நீர் நிலைகளை பராமரிப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.

Latest news