சென்னை, மதுரவாயல் ,மண்டலம் 11, 144 வது வார்டு எம்எம்டிஏ காலனி பகுதியில் சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாநகராட்சியின் மூலதன நிதியின் மூலம் ரூபாய் 3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் 8 வகுப்பறைகள் கட்டுவதற்கான பணியைய் கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்எல்ஏ காரம்பாக்கம். கணபதி தொடங்கி வைத்தார் .
இந்த நிலையில் அதனை கட்டுவதற்காக பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட போது அதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பள்ளியில் சீரமைத்து கட்டிய சுற்றுசுவர் இடிந்து விழுந்தது.
இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் மீது சுற்றுச் சுவர் விழுந்ததில் ஆட்டோ முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வேலை இன்றி ஆட்டோ ஓட்டுனர் கவலை அடைந்துள்ளார்.
இது போன்ற வேலைகள் செய்யும்போது முன்னெச்சரிக்கையாக ஒப்பந்ததாரர்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசு ஒப்பந்ததாரர்கள் இது போன்ற அலட்சியமாக செயல்படுகின்றனர்.
இதன் அருகே உள்ள பள்ளி கட்டிடத்தில் மாணவ மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் அசாம்பாவிதங்களை தடுக்க விழிப்புடன் ஒப்பந்ததாரர்கள் பணியை செய்ய வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
