நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அபிநயா. இந்த படம் அவருக்கு நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமைந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அண்மையில் வெளியான, மலையாள திரைப்படமான ‘பனி’ அபிநயாவிற்கு நல்லதொரு பெயரையும், புகழ் வெளிச்சத்தையும் அளித்துள்ளது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் அபிநயாவிற்கும், அவரது நீண்டநாள் காதலர் வெகசனா கார்த்திக்கிற்கும், ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்தநிலையில் அபிநயா-கார்த்திக்கின் 15 வருட காதல், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து, இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
அபிநயா-கார்த்திக் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, இதைப்பார்த்த ரசிகர்கள் ”ரெண்டு பேரும் இதேபோல எப்பவும் மகிழ்ச்சியா இருங்க,” என்று, வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.