Saturday, May 10, 2025

டெல்லி சட்டமன்றத்தில் அமளி : ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 12 பேர் வெளியேற்றம்

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றி பாஜக அவரை அவமதித்தாக அதிஷி குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் டெல்லி சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா உரையாற்றினார். அப்போது ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூச்சலிட்டனர். முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தை அகற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கினர்.

இதையடுத்து அதிஷி உட்பட 12 ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களையும் நாள் முழுவதும் சபையிலிருந்து வெளியேற்றி சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Latest news