குஜராத் மாநிலம் சூரத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரசியல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியை சேர்ந்த தேசிய இணை செயலாளரான கோபால் இத்தாலியா கலந்து கொண்டார். அவர் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தனது பெல்ட்டை கழட்டி தன்னை தானே அடித்துக்கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பாஜக ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகளாக உள்ள தலைவர்கள் மற்றும் அதிகாரிகளால் மக்களுக்கு நீதி கிடைப்பது கடினமாகிவிட்டது. குஜராத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளது. குஜராத்தில் நீதி இல்லை. பாதிக்கபட்ட மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என கூறி அவர் பெல்ட்டால் அடித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.