Saturday, August 2, 2025
HTML tutorial

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி : அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெல்லி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், மக்களவைத் தேர்தலை போன்று, காங்கிரஸுடன் இணைந்து ஆம் ஆத்மி போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுவதில் சாத்தியக்கூறு இல்லை என்று ஏற்கெனவே அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் காங்கிரஸுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க ஆம் ஆத்மி முன்வந்துள்ளதாகவும் செய்தி வெளியாகின.

இந்த செய்தியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேர்தலை ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் எதிர்கொள்ளவுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து கேஜரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், இந்த முறை தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

HTML tutorial
Related News
HTML tutorial
Latest News