விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜூனா விஜய்யின் தவெகவில் இணைந்தார். அங்கு பிரச்சார குழு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது ஏற்பாட்டின் பேரில் இப்தார் நிகழ்வு சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் தான் ஆதவ் அர்ஜூனா தவெகாவில் இருந்து இடை நீக்கம் செயப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் இந்த தகவலை தவெக மறுத்துள்ளது. இது வதந்தி எனவும், யாரோ தவறாக பரப்பிய செய்தி என கூறியுள்ளது. மேலும் சென்னையில் நடைபெறும் தவெக பொதுகுழு ஏற்பாடுகளில் ஆதவ் அர்ஜூனா தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.