Saturday, June 7, 2025

ஆதார் அப்டேட் இலவசம்! இன்னும் few days தான்! உடனே பண்ணுங்க!

ஆதார் கார்டில் முகவரியை இலவசமாக மேம்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஜூன் 14, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

உண்மையிலேயே, இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI எடுத்துள்ள இந்த முடிவு, கோடிக்கணக்கான பொதுமக்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.

இப்போதுள்ள அடிப்படை விதியின்படி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, ஆதார் முகவரி மற்றும் அடையாள விவரங்களை புதுப்பிக்கவேண்டும். இதனால், உங்கள் ஆதார் கார்டு எப்போதும் சரியான தகவலோடு இருக்க முடியும்.

முதலில் காலக்கெடு டிசம்பர் 14, 2024-ஆக இருந்தது. ஆனால் UIDAI, அதை மறுபடியும் 6 மாதங்கள் நீட்டி, 2025 ஜூன் 14 வரை ஆக்கியுள்ளது.
இந்த தேதிக்குள் மாற்றம் செய்தால் ஒரு ரூபாய் கூட கட்டணமில்லை. ஆனா அதற்கு பிறகு, ரூ.50 கட்டணம் கட்ட வேண்டியிருக்கும்.

மாற்றம் செய்வது எப்படியென்றால் ?
முதலில் myAadhaar போர்டலுக்கு போங்க…
பிறகு உங்க 12 இலக்க ஆதார் எண்ணை கொடுங்க.
பின்னர் வரும் OTP-ஐ போட்டுட்டு Login பண்ணுங்க.
அதுல “Document Update” என்பதை கிளிக் செய்யுங்க.
அதுக்கு பின், உங்கள் PoI மற்றும் PoA ஆவணங்களை JPEG, PNG அல்லது PDF வடிவில் 2MB க்கு குறைவாக அப்லோட் செய்யணும்.
அதுக்கப்புறம் Submit பண்ணுங்க.
உங்களுக்கு ஒரு 14 இலக்க Update Request Number (URN) கிடைக்கும். அதை வைத்து உங்கள் அப்டேட் நிலையைப் பார்த்துக்கலாம்.

அடுத்ததாக முகவரி மாற்றத்துக்கு ஏற்ற ஆவணங்களைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்!

அதற்கு முக்கியமாக மின்சாரம், நீர், எரிவாயு பில்… வங்கி பாஸ்புக், வாடகை ஒப்பந்தம் ஆகியவை தேவைப்படும்… இவை எல்லாம் சரி.
ஆனால் அடையாளத்துக்கு என எடுத்துக் கொண்டால், PAN கார்டு, ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு போன்றவை செல்லும்.

இப்போதுள்ள நாட்களில் ஆதார் அட்டையின் முக்கியத்துவம் அதிகம்…
அரசுத் திட்டங்கள், வங்கி கணக்கு, சப்ஸிடிகள் என அனைத்திற்கும் இது கட்டாயம். அதனால்தான் உங்கள் ஆதார் எப்போதும் சரியாக இருக்கணும்.

முக்கியமாக — ஜூன் 14, 2025 க்குள் இந்த வேலைய இலவசமா முடிச்சுக்கோங்க… இல்லாட்டி, ரொம்ப சின்ன விஷயத்துக்கு கூட கட்டணம் செலவழிக்கணும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news