Friday, January 30, 2026

ஆதார் கார்டில் வந்த மெகா அப்டேட்.. இனி எங்கேயும் அலைய வேண்டாம்..!

இந்தியாவில் ஆதார் அட்டை இன்று மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய தகவல்களை ஆதாரில் மாற்றம் செய்ய இதுவரை மக்கள் சேவை மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் நேர விரயம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் ஏற்பட்டன. ஆனால், இனி அந்த நிலை தேவையில்லை.

பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே தங்கள் ஆதார் தகவல்களை மாற்றம் செய்யும் வகையில் UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. “e-Aadhaar App” என்ற பெயரில் அறிமுகமான இந்த செயலி இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

e-Aadhaar செயலி மூலம், ஆதார் தொடர்பான முக்கிய விவரங்களை பயனாளர்கள் தாங்களே மொபைல் போன் வழியாக திருத்த முடியும். குறிப்பாக பெயர், பெயரில் உள்ள எழுத்துப் பிழைகள், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் போன்ற தகவல்களை இனி ஆதார் மையங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தபடியே புதுப்பிக்கலாம்.

இந்த e-Aadhaar செயலி Android மற்றும் iOS ஆகிய இரு தளங்களிலும் கிடைக்கிறது. சாதாரண மக்கள் கூட எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த செயலியை UIDAI வடிவமைத்துள்ளது. இதன் மூலம் ஆதார் மையங்களில் ஏற்படும் நெரிசல் குறையும் என்றும், பொதுமக்களின் நேரம் மற்றும் உழைப்பு சேமிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து UIDAI அதிகாரிகள் கூறுகையில், இந்த புதிய e-Aadhaar செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முக அடையாளம் (Face Recognition) மற்றும் கைரேகை (Biometric Verification) மூலம் பயனாளரின் அடையாளம் உறுதி செய்யப்படும். இதனால் தரவு பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என்றும், போலி ஆதார் மோசடிகளைத் தடுக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related News

Latest News