விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விரைவில் விஜய்யின் தா.வெ.க கட்சியில் இணைவது குறித்து அறிவிப்பேன் என கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்ற போதிலும் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்துள்ளார். இதனால் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.