Saturday, December 20, 2025

தொடர்ந்து 33 மணிநேரம் படுத்தே இருந்த இளைஞருக்கு ரூ.37 ஆயிரம் பரிசு

சீனாவின் பாட்டோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வினோத போட்டி நடத்தப்பட்டது. அதாவது நீண்ட நேரம் படுத்தே இருக்கவேண்டும் என்பதுதான் இந்த போட்டி.

போட்டியின் போது செல்போன் பயன்படுத்தலாம். ஆனால் எழுந்து உட்காரவோ, கழிவறைக்கு செல்லவோ கூடாது. மீறினால் அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்ற படுவார்கள்.

கடந்த 15-ந் தேதி இந்த போட்டி நடைபெற்றது. 240 பேர் பங்கேற்ற நிலையில், 24 மணிநேரத்துக்குள் 186 பேர் வெளியேற்றப்பட்டனர். இதில் ஒரு இளைஞர் அதிகபட்சமாக 33 மணிநேரம் 35 நிமிடங்கள் வரை படுத்திருந்து போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு ரொக்கப்பரிசாக ரூ.37 ஆயிரம் வழங்கப்பட்டது.

Related News

Latest News