கனடாவில் ஓக்வில்லில் உள்ள பிரபல உணவு நிறுவனத்தின் கடையில், இந்திய ஊழியர் ஒருவரை தவறாக நடத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது, வீடியோவில் ஒரு இளைஞர் இந்திய ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டி, “உடனடியாக உங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள்.. அருவருப்பான இந்தியரே” என்று கூறியது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே இங்கிலாந்தின் ஓல்ட்பாரி நகரத்தில் கடந்த வாரம் 20 வயதுடைய இந்திய வம்சாவளி சீக்கிய பெண் சாலையில் நடந்துசென்றபோது 2 இளைஞர்கள் அவரை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது .
அந்த பெண்ணிடம் உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள் என ஆக்ரோஷமாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
