சென்னை செம்மஞ்சேரியில், வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
செம்மஞ்சேரி பகுதியில், பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு நேரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த மனகட்டே என்பவர் வீடு புகுந்து திருட முயன்றுள்ளார்.
இதை அறிந்த குடியிருப்புவாசிகள், இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார், வடமாநில இளைஞரை கைது செய்து, சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
