Saturday, December 27, 2025

EXCEL Teaching மூலம் தினம் 70 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பெண்மணி

ஆன்லைனில் EXCEL கற்பிப்பதன்மூலம் தினமும் 70 லட்ச ரூபாய் சம்பாதித்து வருகிறார் ஒரு பெண்மணி.

மிஸ் எக்ஸெல் என்னும் புனைப்பெயர் கொண்ட கேட் நார்டன் என்னும் பெண்மணி கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் தொற்று நோய்க்கு மத்தியில் எக்ஸெல் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ஆறே மாதங்களில் அவரது கற்பித்தல் வகுப்பு பிரபலமாகி வருமானம் கொட்டத் தொடங்கியது.

இந்தப் பெண்மணி டிக்டாக் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது ட்டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கை ஒரு மில்லியன்பேர் பின்தொடர்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்..

ஊரடங்கு காலத்தை சமயோசிதமாகப் பயன்படுத்தித் தொழிலதிபராக உயர்ந்துள்ளார் கேட் நார்டன். இவரது நிறுவனத்தில் இவரே தொழிலாளி, இவரே முதலாளி.

ஆம் கேட் நார்டன் ஒருவரே அத்தனைப் பணிகளையும் செய்துவருகிறார்.

Related News

Latest News