Monday, December 29, 2025

8 பேரை திருமண செய்து ஏமாற்றிய கில்லாடி பெண் தலைமறைவு., தீவிரமாக தேடும் போலீஸ்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வாணி, இவருக்கு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பிறகு இந்த தம்பதி ரயிலில் பயணம் செய்தபோது, விசனிங்கபுரம் ரயில் நிலையத்தில் வாணி திடீரென காணாமல் போயுள்ளார். அவர் தனது அத்தை சந்தியாவின் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்று நினைத்து, கணவரின் குடும்பத்தினர் ஸ்ரீகாகுலம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அங்கு வாணியும் அவரது அத்தையும் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.

வாணி இதுபோன்று ஏற்கனவே பலரை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் என்ற தகவல் வெளியானதால், கணவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வாணியும் அவரது அத்தையும் இதே முறையில் இதுவரை 8 பேரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. திருமணம் செய்து கொண்டு பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்டு தப்பிச் செல்வதே இவர்களின் வழக்கமாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். தற்போது தலைமறைவாக உள்ள வாணி மற்றும் சந்தியாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related News

Latest News