நாகர்கோவிலில் ஓடும் அரசு பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் செல்லும் அரசு பேருந்தில் பெண் ஒருவர், மற்றொரு பெண் பயணி ஒருவரின் கழுத்தில் கிடந்த ஐந்து சவரன் நகையை பறித்துள்ளார். இதனை சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் உடனடியாக செயினை பறித்த பெண்ணை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் செயின் திருடிய பெண் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த நிலையில், பொதுமக்கள் அப்பெண்ணை மடக்கி பிடித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து 5 சவரன் நகைகளை மீட்ட நிலையில் அப்பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.