நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ராசிபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே சென்றபோது பேருந்தின் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர்தப்பினர்.