ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ”துப்பாக்கி”. இப்படத்தில் விஜய்க்கு நிகராக ரசிகர்களை ஈர்த்தவர் அப்படத்தில் வில்லனான நடித்த வித்யுத் ஜாம்வால். இதனை தொடர்ந்து சூர்யாவின் அஞ்சான், சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது, வித்யுத் ஜாம்வால் ஹாலிவுட்டில் களமிறங்கி உள்ளார். “ஸ்டிரீட் ஃபைட்டர்” எனும் புதிய படத்தில் தல்சிம் எனும் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அவரின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.

