சேலத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சொந்த பந்தங்கள் ஒன்று கூடி தனியார் டூரிஸ்ட் பேருந்தில் பொள்ளாச்சி நோக்கி கோவை – சேலம், தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டிருந்தனர்.
அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் அருகே பேருந்து சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்வதற்காக டூரிஸ்ட் பஸ் பேருந்து ஓட்டுனர் முயற்சித்துள்ளார்.
இந்த நிலையில் லாரியுடன் அந்த டூரிஸ்ட் பஸ் உரசியதால், நிலை தடுமாறிய பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இருப்பினும், பேருந்தில் பயணித்த 15 நபர்களில் ஆறு நபர்களுக்கு காயம் ஏற்பட்டு அவர்களை பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
