Saturday, January 31, 2026

தமிழ்நாட்டில் மொத்தம் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பர் 4-ந்தேதி தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை வழங்கினர். படிவங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடந்தது. டிசம்பர் 11-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது.

Also Read : மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்களில் 15.18 சதவிகிதம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இறந்த வாக்காளர்கள் 26,32,672 பேரும், முகவரி இல்லாதவர்கள் – 66,44,881 பேரும், இரட்டைப்பதிவுகள் 3,39,278 பேரும் என மொத்தமாக 97,37,832 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

Related News

Latest News