வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
