Wednesday, December 17, 2025

நிதி நெருக்கடி, உடல்நலப் பிரச்சனை., அவதிப்படும் தமிழ் சினிமா நடிகை

தமிழ் திரை உலகில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை வாசுகி. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் ஈடுபட்டு, அ.தி.மு.க.வின் நட்சத்திரப் பேச்சாளராக விளங்கிய வாசுகி, அங்கும் ஓரங்கட்டப்பட்டார். தற்போது நிதி நெருக்கடி, உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்ட இவர், நடிகர் சங்கத்தில் உதவி கோரினார்.

இந்நிலையில், ஆந்திராவில் உள்ள ஸ்ரீராம முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார் வாசுகி. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், சகோதரர் சிரஞ்சீவி ஆகியோர் ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்தனர். முதியோர் இல்லத்துக்கு வந்தபோது உடல் நிலை மோசமாக இருந்தது இப்போது நன்றாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News