மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி, தேசிய குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதுடன், பள்ளிகளில் பல்வேறு கலை மற்றும் இலக்கியப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கேக் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டது. இதில் பிரிட்டானியா, எலைட் நேச்சுரல்ஸ், ஐ.டி.சி. மற்றும் கிரீம் கேக் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மொத்தம் ரூ.9.27 கோடி செலவில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் வழங்கப்பட உள்ளன. குழந்தைகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வழங்கப்பட உள்ள ஒவ்வொரு கேக் துண்டும் 45 கிராம் எடை கொண்டதாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேக்குகள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும்போது, அவற்றின் மொத்த காலாவதி காலத்தில் குறைந்தபட்சம் 30 நாட்கள் மீதமிருக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டின் மூலம் குழந்தைகள் தினத்தன்று பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கேக் வழங்கப்பட உள்ளது.
