Wednesday, December 24, 2025

ADMK பிரமுகர் மனைவி கொலையில் திடீர் திருப்பம்!! வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!

மனைவியை ஓட்டுநரை வைத்து கொலை… கோவையில் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கைது.. ஓட்டுநர் அளித்த அதிர்ச்சியை வாக்குமூலம்… என்ன நடந்தது? விவரிக்கிறது..

கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான கவி சரவணகுமார். இவரது மனைவி மகேஸ்வரி (46). கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி மகேஸ்வரி கத்தியால் யாரோ கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். இதற்கிடையே சுரேஷ் என்பர் மகேஸ்வரியை கொலை செய்து விட்டதாக வடவள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அதனை அடுத்து சுரேஷ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சுரேஷை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்த பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

அதாவது, சுரேஷ், கவி சரவணகுமார் வீட்டில் 15 வருடங்களாக கார் ஓட்டுநராக பணி புரிந்து வருபவர் சுரேஷ். கவி சரவணன் அவரது மனைவி மகேஸ்வரி விவாகரத்து தர மறுத்ததால் கொன்று விடுமாறும், மேலும் வழக்கு செலவையும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேம்பரை சேர்ந்தவர் தருவதாக ஆசை வார்த்தை கூறியதால் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளார்.

சுரேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தடாகம் காவல் துறையினர் கவி சரவணக்குமாரையும் கைது செய்து இந்த வழக்கில் இரண்டாவது கொலை குற்றவாளியாக சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்

கோவையில் விவாகரத்து தர மறுத்த மனைவியை கார் ஓட்டுனரை வைத்து அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதக்கிடையே சம்பவத்தன்று இதற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாதது போல் கவி சரவணகுமார் நடந்துக்கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related News

Latest News