சென்னை போரூர் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை போரூர் அருகே சின்ன போரூர் பிரதான சாலையில், சுமார் 10 அடி அகலம் மற்றும் 5 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், பள்ளத்தின் அருகே தடுப்பு வழிகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குடிநீர் குழாய் இணைப்பில் ஏற்பட்ட உடைப்பே பள்ளம் ஏற்பட காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். போரூர் பகுதியில் பள்ளங்கள் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன