Wednesday, February 4, 2026

நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் தீ., உயிர் தப்பிய 236 பயணிகள்

நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் 236 பேருடன் இன்று புறப்பட்டது. இந்நிலையில் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட 4 நிமிடங்களில் அந்த விமானத்தின் வலதுபுறத்தில் இருந்த இன்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதை கவனித்த விமானி உடனடியாக ஒரு இன்ஜினை அணைத்துவிட்டு, மற்றொரு இன்ஜின் உதவிடன் கல்கத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 225 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 236 பேரும் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News