திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், வித்தியாசமான உயிரினம் நடமாடுவதாக தீயாய் பரவி கொண்டிருக்கிறது. இந்த தகவல் திருவண்ணாமலை பகுதி மக்களை பீதி அடைய செய்திருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே கீழ்வலசை என்ற கிராமத்தில் ஒரு வித்தியாசமான விலங்கு உலவுவதாக பகீர் தகவல் பரவியது.. அந்த விலங்குக்கு 4 விரல்கள் உள்ளதாம். ஆட்டின் தலை இருக்கிறதாம். திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு என்று பரவி வரும் இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: “இது முற்றிலும் வதந்தி. நீளமான நகங்கள், 4 விரல்களை கொண்ட கால்கள் மற்றும் ஆட்டின் தலையுடைய மனித உருவிலான வித்தியாசமான உயிரினத்தின் புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது 2011-ம் ஆண்டு கிராபிக்ஸ் போட்டிக்காக உருவாக்கப்பட்ட படமாகும். அதை பகிர்ந்து திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் என்று வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.